என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் பலி"
- பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
- டிரைவர் பிரதாப் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தூனேரி அவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 44). அரசு பஸ் டிரைவராக கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சிந்து மேனகா (34). இவர்களுக்கு அபிஷேக் (12), ரித்திக் (9) என 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பிரதாப் கோத்தகிரியில் இருந்து கூட்டாடா கிராமத்திற்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, பஸ்சை நிறுத்தினார். பின்னர் நேற்று காலை 6.30 மணியளவில் கூட்டாடாவில் இருந்து பஸ்சை கோத்தகிரி நோக்கி இயக்கி வந்தார்.
கோவில்மட்டம் பகுதிக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது, தொடர் மழையால் சாலையில் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டு பிரதாப் பஸ்சை நிறுத்தினார். அங்கு பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
இதையடுத்து டிரைவர் பிரதாப்பும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். தனது இருக்கை அருகே உள்ள கதவை திறந்து கொண்டு பஸ்சில் இருந்து வெளியே வந்தார். அந்த சமயத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி பஸ்சின் மீது உரசியது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பிரதாப் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த டிரைவர் அரசு பஸ் டிரைவர் பிரதாப்பின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோவில்மட்டம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தின்மீது உயர் மின்அழுத்த கம்பி உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு.#TNDIPR pic.twitter.com/brRwZ8Tzb6
— TN DIPR (@TNDIPRNEWS) August 16, 2024
- விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
சேலம்:
சேலத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் உள்ளே இருந்த 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
அவர்களை கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாயைில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை கொண்டலாம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.
இதில் மினி லாரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.
- திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் தி.புதுக்குப்பம் பள்ளிக்கூட குறுக்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது52). பொக்லைன் டிரைவர்.
சக்திவேலுக்கு உஜ்வாலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவரது உறவினர் இல்ல திருமணம் இன்று காலை திருக்கனூர் அருகே உள்ள திருமங்கலம் சிவன் கோவிலில் நடைபெற்றது.
திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சக்திவேல் திருமணம் முடிந்த பிறகு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கனூர் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது லாரியை முந்தி செல்ல முயன்ற போது அவருக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சித்தலம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் அவரது வாகனத்தில் இடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறிய சக்திவேல் லாரியின் மீது தவறி விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் சக்திவேல் மீது ஏறியதால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்று தெரியவில்லை.
திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த சக்திவேலின் உறவினர்கள் அவர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
- விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.
பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.
தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அயோத்தி யாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (64). இவர் தனியார் சுற்றுலா பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மேட்டுப்பட்டி டோல் கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ராமேஸ்வரம் கோவில் சென்று விட்டு சேலம் வந்தார். மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக டோல்கேட்டில் இறங்கி சாலையை கடக்கும் போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வரதராஜன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசபட்ட வரதராஜன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
- மோசமான சாலையால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
ராஜபாளையம்
சிவகாசி காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர் தளவாய்பாண்டியன் (வயது45), ஆட்டோ டிரைவர். இவர் காக்கிவாடன்பட்டியில் இருந்து சவாரி ஏற்றி கொண்டு ராஜபாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்குள் சிக்கிய தளவாய் பாண்டியன் காயமடைந்து பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து தளவாய் பாண்டியன் மகன் முரளி மனோஜ் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமலும், செப்பனிடபடாமலும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை களை விரைவாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ராஜபாளையம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் விபத்துக்களையும், உயிர் பலிகளையும் தடுக்க முறையான வடிகால் வசதியுடன் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பகண்டை கூட்டு ரோட்டில் நடந்த விபத்தில் கார் மரத்தில் மோதி டிரைவர் பலியானார்.
- கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
கள்ளக்குறிச்சி:
கண்டாச்சிபுரத்தை அடுத்த குடமரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). டிரைவர். இவர் காரில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலை யோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் டிரைவர் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்லம்பள்ளி அருகே இ இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி டிலைவர் பலியானார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அடுத்த சிவாடியில் தனியார் பெட் ரோலிய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் மேச்சேரி பள்ளப் பட்டியைச் சேர்ந்த அம்மாசியின் மகன் வெங்கடேசன் (43) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் பாகலஅள்ளி அருகில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதப மாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீஸ் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராமநாதபுரம் அருகே கல்லூரி பஸ் மோதி டிரைவர் பலியானார்.
- இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது40), டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கீழக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த தனியார் கல்லூரி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கணேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
- அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
சேலம்:
சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக நள்ளிரவு வந்த மற்றொரு லாரி நின்ற லாரியின் வலது புறம் உரசி சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இதையடுத்து அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
டிரைவர் பலி
இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் மேச்சேரி காக்காச்சி வளவை சேர்த்த பச்சமுத்து மகன் மணி (வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். அந்த வேனில் வந்த டவர் அமைக்கும் வேலைக்கு சென்ற மேச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், தங்கராசு, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு குரங்குசாவடியில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவர் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
சங்ககிரி:
பெங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கூடல் கேட்டில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவருடன் லோடுமேனாக திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன் (36) என்பவரும் உடன் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு சங்ககிரி அடுத்து வீராச்சிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரியின் முன் பகுதி முற்றிலும் சிதைந்து போனது. இதில் மகேந்திரன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்